ஆஹ், அஹ் என்று திக்ர் செய்யலாமா? தொடர் - 06
இந்த வசனத்திற்கான
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் கருத்துக்கள்
1. தப்ஸீருத்தபரி –
'அவ்வாஹ்' என்பது அதிகமாக 'ஆஹ்' என்று சொல்வதாகும்.
தப்ஸீருத்தபரி, ஜாமிவுல் பயான் பீ தஃவீலில் குர்ஆன் (224-310)
2. தப்ஸீருல் ஆலூஸி –
'அவ்வாஹ்' என்பது அதிகமாக 'ஆஹ்' என்று சொல்வதாகும். இது உள்ளம் பூரணமான இரக்க நிலையை அடைவதை குறித்து மறைமுகமாக
சொல்லப்பட்ட வார்த்தை என சில அறிஞர்கள் கருதுகிறார்கள். றூஹூல் மஆனி (7/382) மஹ்மூத் இப்னு அப்துல்லாஹ்
அல் ஆலூஸி
3. தப்ஸீர் தஹ்ரீர் வத்தன்வீர்
- 'அவ்வாஹ்' என்பது அதிகமாக 'அவ்ஹ்' என்று சொல்வதாகும் இந்த 'அவ்ஹ்' என்ற வார்த்தையை 13 விதமாக கூறமுடியும் என்று அறபு மொழி அகராதியான
காமூஸில் கூறுப்பட்டுள்ளது. தப்ஸீருத்தஹ்ரீர்
வத்தன்வீர் (1/1916) ஆசிரியர் இப்னு ஆஷூர்
4. தப்ஸீர் நுகதி வல்
உயூன் (2/147)
- ஆசிரியர் : அல் மாவர்தி (வபாத்:450 ஹி)
5. தப்ஸீர் பஹ்ரில் உலூம்
- (2/269)
ஆசிரியர் : சமர்கன்தி (வ:373இ ஹி)
6. தப்ஸீருல் முஹர்ரரில்
வஜிஸ் - (3/325) ஆசிரியர் : இப்னு
அதிய்யா (வ:542 ஹி)
7. தப்ஸீரு ஸாதில் மஸீர்
- ஆசிரியர் : இப்னுல் ஜவ்ஸி (வ:597, ஹி)
8. தப்ஸீரு மஆலிமுத்
தன்ஸீல் - (4/102)ஆசிரியர் : அல் பகவி
(வ:510, ஹி)
9. தப்ஸீரு தப்ஸீரில்
குர்ஆன் - (2/325) ஆசிரியர் : இஸ்ஸூத்தீன்
இப்னு அப்திஸ்ஸலாம் (வ:660, ஹி)
10. தப்ஸீரு மதாரிகுத்
தன்ஸீல் - (2/164) ஆசிரியர் : நஸபி (வ:710, ஹி)
11. தப்ஸீரு லுபாபு தஃவீல்
- (3/510) ஆசிரியர் : ஹாஸின்
(வ:714, ஹி)
12. தப்ஸீரு ஜவாஹிருல்
ஹிஸான் - ஆசிரியர் : ஸஆலிபி (வ:875, ஹி)
13. தப்ஸீரு அத்துர்ருல்
மன்ஸூர் - (2/212) ஆசிரியர் : அஸ்ஸுயூதி
(வ: 911, ஹி)
14. பத்ஹூல் கதீர் -
(2/396)
ஆசரியர் : ஷவ்கானி ( வ:1250,
ஹி)
15. தப்ஸீருல் பஹ்ரில்
மதித் - (2/454) ஆசிரியர் : இப்னு
அஜீபா (வ:1266 ஹி)
16. தப்ஸீர் றுஹுல் பயான்
-(3/490)
ஆசிரியர் : இஸ்மாயீல் ஹக்கி
அல்புரூஸி (வ:1127 ஹி)
17. தப்ஸீருர் ராஸி (மபாதீஹூல்
கைப); - (8/167) ஆசிரியர் : பஹ்ருத்தீன்
றாஸி (வ:606, ஹி)
ஹதீஸ் ஆதாரங்கள்
ஹதீஸ் -01
01. இப்னு அப்பாஸ் றழியல்லாஹு
அன்ஹு அறிவிக்கிறார்கள்.
யா அல்லாஹ்! எனக்கு
உதவி செய்வாயாக! எனக்கு எதிராக யாருக்கும் உதவி செய்து விடாதே! எதிரிகளை விட்டும் என்னை
நான் பாதுகாத்துக் கொள்வதற்கான வழியைக் காட்டித்தருள்வாயாக! எனது எதிரிக்கு என்னை விட்டும்
அவனை அவன் பாதுகாத்துக் கொள்ளும் வழியைக்காட்டி விடாதே! நேரான வழியை எனக்கு காட்டித்தருவதோடு
அதை எனக்கு இலேசாக்கியும் விடுவாயாக! எனக்கு அநியாயம் செய்தவர்களுக்கு எதிராக உதவி
செய்வாயாக! இறiவா! என்னை மிகவும்
நன்றி செலுத்தக்கூடியவனாக ஆக்கவிடு! உன்னை அதிகம் திக்ர் செய்யக்கூடியவனாக ஆக்கிவிடு!
என்னை அதிகம் பயப்படக்கூடியவனாக ஆக்கிவிடு! உனக்கு அதிகம் வழிப்படக்கூடியவனாக ஆக்கிவிடு!
உன்னைப் பயப்படக்கூடியவனாக ஆக்கிவிடு! உன்னளவில் அதிகம் சஞ்சலப்பட்டு ஆஹ் ஆஹ் என்று
சொல்பவனாக ஆக்கிவிடு! உன் பக்கம் சாயக்கூடியவனாக ஆக்கிவிடு! இறைவா! எனது பாவமன்னிப்புக்
கோரலை ஏற்றுக் கொள்வாயாக! எனது பாவத்தை அழித்துவிடுவாயாக! எனது பிரார்த்தனையை அங்கீகரிப்பாயாக!
என் ஆதாரத்தை இஸ்திரப்படுத்துவாயாக! எனது உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! எனது நாவை
சீர்படுத்துவாயாக! எனது உள்ளத்தின் மோசடியை உருவி எடுத்து விடுவாயாக! என நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்திப்பவர்களாக
இருந்தார்கள்.
புகாரி (அதபுல் முப்ரத்
- 664,665), அபூ தாவூத் (1510,1511),
திர்மிதி (3551), இப்னு மாஜாஹ் (3830), நஸாயி (ஸுனனுல் குப்ரா – 6/151), முஸ்னத் அஹ்மத் (1997), இப்னு ஹிப்பான் (948), இப்னு அபீ ஷைபா (10/280), அப்து இப்னு ஹூமைத் (1/236), ஹாகிம் (1/519), முஸ்னதுஷ் ஷிஹாப் (2/344)
இது ஸஹீஹான ஹதீஸ்
என இமாம்களான திர்மிதி, இப்னு ஹிப்பான்,
பகவி, ஹாகிம் றஹ்மதுல்லாஹி அலைஹி போன்றவர்கள் கூறியிருப்பதோடு
இமாம் ஹாகிமின் கூற்றை தஹபி இமாம் அவர்களும் சரிகண்டுள்ளார்கள்.
ஹாபில் இப்னு ஹஜர்
றஹ்மதுல்லாஹி அலைஹி அல் அமாலில் முத்லகா (பக்:207) கூறியிருப்பதாவது: இதன் அறிவிப்பாளர்களில் தலீக்
இப்னு கைஸ் என்பவரைத் தவிர மற்ற அனைவரும் ஸஹீஹுடைய அறிவிப்பாளர்களாகும். இவர் அபூ ஸாலிஹ்
அல் ஹனபியுடைய சகோதரரும், பஸராவைச் சேர்ந்த
தாபிஈயுமாவார். இவர் நம்பகமான ஒருவர். இந்த ஹதீஸை இவர் மாத்திரம் தான் அறிவித்திருப்பதையே
எனக்கு காணக்கிடைத்திருப்பதால் இது ஹஸன் என்ற
தரத்தைச் சார்ந்தது என்றே கூற வேண்டியுள்ளது.
இந்த ஹதீஸூக்கு விரிவுரை
எழுதும் போது திர்மிதியின் விரிவுரையாகிய துஹ்பதுல் அஹ்வதியில் (பக் : 368)
முபாரக்பூரி றஹ்மதுல்லாஹி
அலைஹி கூறியிருப்பதாவது:
அவ்வாஹ் என்றால் மிக
சஞ்சலப்படுவதாகும். இது அவ்வஹ தஃவீஹன், தஅவ்வஹ தஅவ்வுஹன் என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். இதன் பொருள் அவ்வஹ் என்று
சொல்வதாகும். அதாவது அதிகம் அவ்வஹ் என்று சொல்வதாகும். இது கவலை அடைந்தவரிடத்தில் இருந்து
வெளியாகும் சத்தமாகும்.
குறிப்பு : அவ்வஹ்
என்ற வார்த்தையை 13 முறைப்படி உச்சரிக்க
முடியும் என்று அரபு அகராதிகளில் கூறப்பட்டிருப்பதை ஏற்கனவே நாம் கூறியுள்ளோம.;
அவைகளில் ஆஹ் அஹ் என்று சொல்வதும்
உள்ளதாகும்.
தொடரும்.....
No comments:
Post a Comment