Saturday, October 21, 2017

ஆஹ், அஹ் என்று திக்ர் செய்யலாமா? தொடர் - 10


குற்றச்சாட்டும் பதிலும்

குற்றச்சாட்டு - 01 ஆஹ் என்று  திக்ர் செய்வதன் முலம் அல்குர்ஆனுக்கு மாற்றம் செய்துவிட்டார்கள். அல்லாஹ் என்ற திருநாமத்தை சிதைத்துவிட்டார்கள். பூரணத்துவமான பண்புகளைக் கொண்ட அல்லாஹு தஆலாவின் திரு நாமங்களை நோயாளி வருத்தப்படும் போது கூறும் வார்த்தையாக மாற்றி பூரணத்துவத்தை இல்லாமலாக்கிவிட்டார்கள்.  மேலும் அல்லாஹ்வின் திருநாமங்கள் அல்குர்ஆனிலோ, ஹதீஸிலோ கூறப்பட்டதாக இருக்கவேண்டும். ஆஹ் என்பது அவ்வாறு கூறப்படாததாகும்.

பதில்:
ஸய்யித் அஹ்மத் வாபிஷ் ஷாதுலி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியிருப்பதாவது :
அல்லாஹு தஆலாவுக்கு அழகிய பல திருநாமங்கள் இருக்கின்றன.
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன் அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.   (7:180)

திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறியிருப்பதாவது :
அல்லாஹு தஆலாவின் அழகிய திருநாமங்கள் என்பது இறை பரிபூரணத்துவத்தை உணர்த்தும் சொற்களாகும். அவை புனித அல் குர்ஆனில் கூறப்பட்டதாக இருக்கலாம். அல்லாஹ், கரீப், முஹீத், ஸரீஃ, அஹத், அஹ்கமுல் ஹாகிமீன், கைருல் பாஸிலீன், துல் அர்ஷி, துத்தவ்லி போன்றதை உதாரணமாக கூறலாம். அல்லது ஹதீஸிலும் கூறப்பட்டதாக இருக்கலாம்.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறியுள்ளார்கள். ((அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் இருக்கின்றன. யார் அதை மனனமிட்டுக் கொள்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விடுவார். (அவைகள்) அல்லாஹ், அர்ரஹ்மான், அர்ரஹீம்....)) அல்லது புனித அல்குர்ஆனில் கூறப்படாமல் ஹதீஸில் மாத்திரம் கூறப்பட்டதாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறியுள்ளார்கள். நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் தனது அடியார்களுக்கு வழங்கியிருக்கும் அருள்களின் அடையாளத்தை அவர்களில் காண விரும்புகிறான்)) மேலும் அல் ஜலீல், அல்வலிய்யு போன்ற அல்குர்ஆனில் நேரடியாக கூறப்படாமல் ஸுன்னாவில் மாத்திரம் கூறப்பட்டதாகும். அல்லாஹ்வின் திருநாமங்கள் எனும் போது 99 மாத்திரம் தான் என்று கருதக்கூடாது. அவ்வாறு கருதினால் ஹதீஸ்கள் சிலது சிலதுடன் முரண்படும் நிலை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அது நடமுறை சாத்தியமற்றதாகும்.

இந்த 99 திருநாமங்களைக் கொண்டு மாத்திரம் தான் திக்ர் செய்ய வேண்டும் வேறு திருநாமங்களைக் கொண்டு திக்ர் செய்யக்கூடாது என சொல்லக்கூடாது. ஏனெனில் இந்த 99 திருநாமங்களைத்தவிர இன்னும் பல திருநாமங்கள் அல்லாஹு தஆலாவுக்கு இருக்கின்றன. அதற்கு உதாரணமாக ஹன்னான், மன்னான் இது போன்றவற்றை உதாரணமாக கூறலாம். நபிகள் கோமான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் யா ஹன்னான், யா மன்னான், உனது அருளைக் கொண்டு உதவி தேடுகிறேன் எனப்பிராத்தித்துள்ளார்கள்.
அல்லாஹு தஆலாவுக்கு மட்டிட முடியாத எண்ணிக்கையிலான திருநாமங்கள் இருப்பதாக சில அறிஞர்கள் கூறியுள்ளார்கள். இது ஒவ்வொரு இனங்களைப் பொருத்து பலதாகக்கூடியதாகும். ஜின்களுக்கென்று, மலக்குமார்களுக்கென்று, உயிரினங்களுக்கென்று பலவிதமாக இருக்கின்றன. அனைத்தும் அல்லாஹு தஆலாவை தஸ்பீஹ் செய்வதாக நாம் அறிந்திருக்கிறோம். அல்லாஹு தஆலா திருமறையில்
 ஏழு வானங்களும், பூமியும் அதிலுள்ள அனைத்தும் அவனை தஸ்பீஹ் செய்கின்றன.
                                               ஸூரத்துல் இஸ்ரா: 44

அல்லாஹு தஆலாவுக்கு 99 விட பல திருநாமங்கள் இருப்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

    யா அல்லாஹ் நீ உனக்கு என்னென்ன திருநாமங்களை வைத்திருக்கிறாயோ அவை அனைத்தைக் கொண்டும், அல்லது உனது மறைவான அறிவில் எதை தெரிவு செய்து வைத்திருக்கிராயோ அவை அனைத்தைக் கொண்டும், அல்லது உனது வேதத்தில் இறக்கிவைத்த, அல்லது உனது படைப்புகளில் யாராவது ஒருவருக்கு கற்றுக்கொடுத்த அனைத்தைக் கொண்டும் உனது மகத்தான அல்குர்ஆனை உள்ளங்களுக்கு வசந்தமாகவும், கவலைகளை தீக்கக்கூடியதாகவும் இன்னும் .......  ஆக்கும்படி கேற்கிறேன்.

இங்கு 'படைப்புகளில் ஒருவருக்கு கற்றுக்கொடுத்த திருநாமங்கள்' என்பதன் மூலம் ஆஹ் என்ற திருநாமத்தை சூபிய்யாக்கள் ஒருவருக்கு அல்லாஹு தஆலா கற்றுக்கொடுத்திருக்க முடியும். அதை அவர்கள் அவர்களை பின்பற்றுகவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்கள். இது புகாரியில் இடம் பெறும் ஸஹீஹான ஹதீஸாகும். அல்லாஹு தஆலாவின் அடியார்களில் ஒருவர் மறைவான ஒரு திருநாமத்தை அறிந்து கொள்வது முடியுமானது என்பதையே இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. அதை ஏற்காமல் இருக்க முடியாது.


எனவே 'ஆஹ்' என்பது அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று எனக்கூறும் அறிஞர்களுக்கு இந்த ஹதீஸ் மிக வழுவான ஆதாரமாகும். இந்த ஹதீஸையும், ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் 'அவரை விட்டுவிடுங்கள் அவர் அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றையே சொல்கிறார்' என்ற ஹதீஸூம் அதற்கான ஆதாரங்களாகும். ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது எனக்கூறுவது ஏற்கமுடியாததாகும். அந்த ஹதீஸ் அல்லாமா அஸீஸீ கூறியதைப் போல ஹஸனுன் லிஙைரிகி என்ற தரத்தை சார்ந்ததாகும் அல்லது அல்பானி போன்றவர்கள் கூறுவது போல் பலவீனமான ஹதீஸாகும். 
தொடரும்.......

No comments:

Post a Comment