இப்னு தைமிய்யா பற்றி
அறிஞர்களின் கருத்துக்கள்
மேலே கூறப்பட்ட இப்னு தைமிய்யாவின்
கொள்கை கோட்பாடுகளை பார்க்கும் போது அவரைப்பற்றி இமாம்கள் வழங்கியுள்ள தீர்ப்பு உனக்கு
ஆச்சரியமாக இருக்காது என நினகை;கிறேன். அவரைப்பற்றி அல்ஹாபில் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (றஹ்)
அவர்கள் பின்வருமாறு பத்வா வாழங்கியுள்ளார்கள்.
இப்னு தைமிய்யாவை பற்றி உலமாக்கள்
பல வகையான கருத்துக்களை கூறியுள்ளார்கள்.
சிலர் அல்லஹ்வுக்கு உருவம்
கற்பித்தவர் என்று கூறியுள்ளார்கள். ஏனெனில் அவர் ஹமவிய்யா வாஸிதய்யா ஆகிய நூல்களிலும்
வேறு நூல்களிலும் கை, கால்பாதம், கொடுங்கால், முகம் என்று திருக்குர்ஆன்
ஹதீஸில் கூறப்படுபவை யதார்த்தமான உண்மையான பொருளைக்கொண்ட பண்புகள் என்று கூறியிருப்பதும்
அல்லாஹு தஆலா அர்ஷின் மீது மெய்ப்பொருளாகிய தாத்துடன் இருக்கிறான் என்றும் கூறியிருப்பதுமே
அதற்கான கராணமாகும்.
வேறு சிலர் ஸின்தீக் (முஸ்லிமாக
வெளியில் காட்டிக்கொள்பவர்) என்றும் கூறியுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களைக் கொண்டு உதவி தேடமுடியாது என்று சொன்னதே அதற்hகன காரணமாகும்.
இன்னும்
சிலர் நயவஞ்கன் முனாபிக் என்று கூறியுள்ளார்கள்.
அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள்
எங்குசென்றாலும் இழிவாக்கபப்பட்டவர்களாக இருந்தார்கள், அவர்கள் எத்தனையோ
தடவை கலீபாவாக முயற்சித்தும் அதை பெற்றுக்கொள்ளவில்லை, அவர்கள் மார்க்கத்துக்காக
இல்லாமல் பதவிக்காவே யுத்தம் செய்தார்கள், அவர்கள் பதவியை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள், இன்னும் உஸ்மான் றழியல்லாஹு
அன்ஹு பண ஆசை பிடித்தவர்களாக இருந்தார்கள், அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறுபிள்ளையாக இருக்கும் போதே
இஸ்லாத்தை ஏற்றதால் சிறுபிள்ளையின் இஸ்லாம் சரிவரமாட்டாது என்றும் அபூ ஜஹ்லின் மகளை
திருமணம் பேசிய விடயம் சம்பந்தமாக சொன்ன கருத்துக்களுமே அதற்கான காரணமாகும்.
ஏனெனில் 'அலியே நயவஞ்சகனைத்
தவிர உம்மை யாரும் கோபிக்கமாட்டார்' என்று நபி நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் கூறியிருக்கின்றார்கள்.
வேறு சிலர் மிகப்பெரிய ஆட்சியை
பெற முயற்சித்தவர் எனக்கூறுகின்றனர்.
இதனால் இப்னு தூமர்த் என்ற
அரசனை பற்றி அதிகம் பேசுபவராகவும் புகழ்பவராகவும் இருந்ததே காரணமாகும். அத்துரருல்
காமினா (1:86)
இன்று சிலர் யாரை பின்பற்றவதற்கு
தகுதியாக எடுத்துக்கொண்டார்களோ அவரின் நிலையே இதுவாகும். அவரின் தனிப்பட்ட கருத்துக்களை, திசை திரும்பிய சிந்தனைகளை
பலமாக பிடித்தார்கள். அதற்கும் மேலாக இன்னும் சில விடயங்களை அவர்களே உண்டாக்கியும்
கொண்டார்கள்.
இவரைத்தான் சில ஸலபி பிரச்சாரகர்கள்
மக்கள் முன் நல்லவராக காட்டுவதோடு அவரின்; மோசமான சிந்தனைகள், வழிகெட்ட கொள்கை கோட்பாடுகள், திசை திரும்பிய சிந்தனகைளை மறைத்துவிடுகிறார்கள்.
அதை நேரடியாக மக்கள் முன்வைக்காமல் அவர்களின் கருத்துக்கள் ஒரு சில புத்தகங்களிலும்
கைநூல்களிலுமே தங்கியுள்ளது.
அவர்கள் அல்லாஹ்வையும் ஈமான்
கொண்டவர்களையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள், அவர்கள் அவர்களையே அவர்களை அறியாமால் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பகரா: 09
இப்னுதைமிய்யா பற்றி மேலதிகமாக
அறிந்துகொள்ள சில நூட்களின் பெயர்களை தருகிறோம்:
1- இப்னுதைமிய்யாவின் உண்மை முகம்
2- இப்னுதைமிய்யா வாழ்வும் கோட்பாடுகளும்
3- நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின்
குடும்பத்தார்கள் மீதும் இப்னு தைமிய்யா இலைத்த தவறுகள்
4- இப்னுதைமிய்யாவும் ஹதீஸ் துறையில் அவரது போக்கும்
5- அஹ்மத் இப்னு தைமிய்யாவின் வழிகேடுகளை தெளிவுபடுத்தும் உயர்ந்த
கருத்துக்கள்
6- இப்னுதைமிய்யா ஸலபியல்ல
7- இப்னுதைமிய்யாவின் பத்வாக்கள் நிறுவையில்
எமது வெளியீடுகள்
1- ஸகாத் பெறும் தகுதியுடைய பீஸபீலில்லாஹ் கூட்டத்தவர் பற்றிய தெளிவு
(கர்ளாவிக்கு மறுப்பு)
2- பெண்கள் கத்னா செய்யப்பட வேண்டுமா? (பெண் சஞ்சிகைக்கு
மறுப்பு)
3- ஜிஹாத் என்றால் என்ன? (அல்லஜ்னா சஞ்சிகைக்கு மறுப்பு)
4- தாயத்து துஆ கட்டுவது கூடுமா? (அஹத் நிறுவனத்தின் பிரசுரத்துக்கு மறுப்பு)
முற்றும்
No comments:
Post a Comment